தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் சோதனைப்பதிப்பாக மொத்தம் இரண்டுப்பதிப்புகளை வெளியிட்டேன். தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14-ஆம் தேதி என்னுடைய கூட்டு வலைப்பதிவான http://tamilbasic.blogspot.com-ல் தமிழ் ஃபர்ஃபாக்ஸை அறிமுகப்படுத்தி இன்றோடு 16 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் 118 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஃபயர்ஃபாக்ஸை பதிவிறக்கி சோதித்த அனைவருக்கும் மிக்க நன்றி. மே தினமான நாளை தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் இறுதி பதிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் ஃபயர்ஃபாக்ஸிற்கான உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி.
வாழ்க தமிழ் !!!
குறிப்பு : தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் சம்பந்தமான உங்களுடைய கருத்துக்கள்,கேள்விகள், உதவிகள் யாவற்றையும் tamilfirefox@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்தவும்.