Tamil Firefox 2 has been released . . .

மே 1, 2007

Hai friends, today i have released the Tamil version of Firefox 2.0.0.3. For more details checkout the home page of Tamil Firefox

 


மொத்தம் 100க்கும் அதிகமான பதிவிறக்கங்கள் : தமிழ் ஃபயர்பாக்ஸ்

ஏப்ரல் 30, 2007

தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் சோதனைப்பதிப்பாக மொத்தம் இரண்டுப்பதிப்புகளை வெளியிட்டேன். தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14-ஆம் தேதி என்னுடைய கூட்டு வலைப்பதிவான http://tamilbasic.blogspot.com-ல் தமிழ் ஃபர்ஃபாக்ஸை அறிமுகப்படுத்தி இன்றோடு 16 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் 118 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஃபயர்ஃபாக்ஸை பதிவிறக்கி சோதித்த அனைவருக்கும் மிக்க நன்றி. மே தினமான நாளை தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் இறுதி பதிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழ் ஃபயர்ஃபாக்ஸிற்கான உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி.

வாழ்க தமிழ் !!! 

குறிப்பு :  தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் சம்பந்தமான உங்களுடைய கருத்துக்கள்,கேள்விகள், உதவிகள் யாவற்றையும் tamilfirefox@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்தவும்.


தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் சோதனைப்பதிப்பு 2

ஏப்ரல் 19, 2007

தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் அடுத்த சோதனைப்பதிப்பு 2 வெளிடப்பட்டுவிட்டது. முந்தையப் பதிப்பில் பல வார்த்த்டைகள் மொழிப்பெயர்க்கப்படாமல் இருந்தன. அவையெல்லாம் இப்பொழுது முடிக்கப்பட்டு, தமிழ் மொழிப்பொட்டலத்தை Portable Firefoxல் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதனை பதிவிறக்கி எளிமையாக சோதித்துப்பார்க்க முடியும். விரைவில் தானாக நிறுவிக்கொள்ளக்கூடிய மொழி பொட்டலம் வெளியடப்படும். இதன் மூலம் அனைத்து தரவுத்தளங்களிலும்  ஃபயர்ஃபாக்ஸை தமிழில் பயன்படுத்த முடியும். வணக்கம் !!!

தமிழ் ஃபயர்ஃபாக்ஸை பதிவிரக்க இங்கு சொடுக்கவும் . . . .